ஆன்லைன் வீடியோ அலாரம்

அலாரம் நேரம்

:

செலக்ட் செய்ய பாடல் அல்லது வீடியோ பெயரை உள்ளிடவும்.

மறுபடியும் அடித்தல் காலம்? (நிமிடங்கள்)

மீதமுள்ள நேரம்

ஆன்லைன் வீடியோ அலாரம் என்றால் என்ன?

அலாரம் வைப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையா, இதோ இனி ஆன்லைன் வீடியோ அலாரத்தைப் பயன்படுத்தி உங்களுக்குப் பிடித்த யூடியூப் வீடியோவை அலாரமாக வைக்கலாம். இது பயன்படுத்த எளிதானது, நீங்கள் எதிர்பார்க்கும் மற்ற மியூசிக் அலாரம் போலவே இது செயல்படும், அத்துடன் தினமும் ஒரே அலாரமாக இல்லாமல் உங்களை எழுப்ப கூடுதல் சப்தங்களும் உள்ளது.

ஆன்லைன் வீடியோ அலாரத்தை எப்படி பயன்படுத்துவது?

ஆன்லைன் வீடியோ அலாரத்தைப் பயன்படுத்துவது ரொம்ப எளிமையானது, இதில் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் உள்ளது. முதலில் இரண்டு டிராப்டவுன் (dropdown) கட்டங்களைக் கிளிக் செய்து, வீடியோ அலாரம் அடிக்க வேண்டிய நேரத்தைத் தேர்வு செய்யவும். அடுத்து, உங்களுக்குத் தேவையான வீடியோவின் பெயரை உள்ளிடவும், அந்த வீடியோ பிளே செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். உங்களுக்குத் தேவையென்றால், வீடியோவிற்கு கீழே சென்று எத்தனை நிமிடங்களுக்கு ஒருமுறை மறுபடியும் அடிக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்யவும். கடைசியாக, “அலாரம் அமைக்கவும்” என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். அலாரத்தை அமைத்த பிறகு, இது செயல்பட இந்தப் பக்கத்தை மூடக்கூடாது, அதாவது, மற்ற பக்கங்களை உங்களால் பார்க்க முடியாது, அந்த அலாரம் வைத்த பக்கத்தை அப்படியே வைத்திருக்கவேண்டும். அத்துடன் ஆன்லைனில் இருக்கவேண்டும், இன்டர்நெட் இல்லாமல் இதைப் பயன்படுத்த முடியாது.

என்ன மாதிரியான யூடியூப் வீடியோக்களை நீங்கள் பயன்படுத்தலாம்?

உங்களை எழுப்புவதற்கு நீங்கள் என்ன வீடியோவை விரும்புகிறீர்களோ அதைத் தேர்வு செய்யலாம், மேலும் விரைவாகவும் நன்றாகவும் வீடியோக்களைத் தேர்வு செய்யலாம். நேரத்தைத் தேர்வு செய்ததற்குக் கீழே ஒரு கட்டம் உள்ளது, அதில் உங்களுக்குப் பிடித்த வீடியோவின் பெயரை நீங்கள் உள்ளிடலாம். முக்கியமாக உங்களுக்குப் பிடித்த வீடியோவின் பெயரை குறிப்பிட வேண்டும். உதாரணமாக, "Kaliyon Ka Chaman" என்று உள்ளிட்டால், இதனுடைய அதிகாரப்பூர்வ வீடியோ அல்லது மற்றொரு பாடகர் பாடிய நேரலை இசைக்கச்சேரி வீடியோ உங்களுக்குக் கிடைக்கலாம். குறிப்பிட்ட ஒரு வீடியோ உங்களுக்கு வேண்டும் என்றால், யூடியூப் URL-இன் கடைசி பதினொன்று எழுத்துக்களை நீங்கள் உள்ளிடுவது அருமையாக இருக்கும். எ.கா "LKzTpM_KQsQ".

இசையுடன் உள்ள ஆன்லைன் வீடியோ அலாரத்தை நீங்கள் ஏன் பயன்படுத்த வேண்டும்?

பெரும்பாலான அலாரங்களில் ஒருசில அலார சத்தங்களே உள்ளது, ஆனால் யூடியூப்பில் உள்ள ஒட்டுமொத்த தொகுப்பில் இருந்து ஒரு வீடியோவை நீங்கள் தேர்வு செய்யும்போது ஒரு வித்தியாசமான உணர்வைத் தருகிறது, இதை நீங்கள் தேர்வு செய்வதற்காகப் பல்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது. இந்த யூடியூப் வீடியோ அலாரத்தின் மூலம் வேகமான ஒலி அலைகளைத் தரும் வீடியோ அல்லது உங்களுக்குப் பிடித்த குருவின் தியான வீடியோவைத் தேர்வுசெய்யலாம். ஸ்டாப் வாட்ச்சைப் போன்று இது பயன்படுத்த எளிதானது, மேலும் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தைக்கூட டைமராக நீங்கள் அமைக்கலாம். கம்ப்யூட்டர் அல்லது மொபைல் சாதனத்தில் உள்ள பிரவுசரில் யூடியூப் அலாரம் ஆப்ஸைப் பயன்படுத்த உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.